மாரி 2 படத்தின் மாரி கெத்து வீடியோ வெளியீடு : சாய் பல்லவியின் குத்தாட்டம்!

'மாரி' படத்தின் தொடர்ச்சியாக ‘மாரி 2’ படம் சமீபத்தில் வெளியானது . பாலாஜி மோகன் இயக்கியுள்ள இப்படத்தில் தனுஷுடன் சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார், டோவினோ தாமஸ், கிருஷ்ணா மற்றும் ரோபோ ஷங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் வைரல் ஹிட்டானது இதனைத் தொடர்ந்து மாரி கெத்து பாடலின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஹீரோயின் சாய் பல்லவி போடும் குத்தாட்டம் ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளது.