மாரி-2 படத்தில் யுவன் ஷங்கர் ராஜா பாடல்!!!

பாலாஜி மோகன் இயக்குகின்ற மாரி-2 படத்தில் தனுஷ், சாய் பல்லவி, கிருஷ்ணா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார். இதனை தனுஷ் தனது டுவிட்டரில் “மாரி-2 படத்தில் இவர் பாடியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும், ஒரு தெய்வீக அனுபவம் கிடைத்த உணர்வும், எங்கள் குழு ஆசிர்வதிக்க பட்டதாகவும் உணர்கிறேன்” என்று பதிவு செய்துள்ளார்.