மாலிவுட் நடிகை பார்வதி நம்பியாருக்கு விரைவில் திருமணம் !

மலையாளத்திலிருந்து கோலிவுட்டுக்கு வரும் நடிகைகளில் சிலர் நிலைத்து நிற்கின்றனர். நவ்யா நாயர், காவ்யா மாதவன், நஸ்ரியா நாசிம், பிரியாமணி, பாவனா என பல நடிகைகள் குடும்ப தலைவிகள் ஆகிவிட்டனர். கேணி படத்தில் நடித்தவர் பார்வதி நம்பியார். மலையாளத்திலும் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தார். இவரும் நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு கல்யாணத்துக்கு தயாராகிவிட்டார். தனக்கு நிச்சயதார்த்தம் நடந்த தகவலை  பார்வதி நம்பியரே பகிர்ந்திருக்கிறார். வினித் மேனனுடன் நிச்சயதார்த்தம் நடந்தது என ஒரு வரியில் நிச்சயதார்த்த தகவலை பகிர்ந்து கொண்டவர் நிச்சயதார்த்த படத்தையும் சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார்.