மாஸ் கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தாலே, ‘மாஸ்’ கதாநாயகி – திரிஷா !

ஏறக்குறைய எல்லா கதாநாயகர்களுடனும் ஜோடியாக நடித்து விட்டேன். ரஜினிகாந்துடன் மட்டும் ஜோடி சேரவில்லையே என்ற வருத்தம் இருந்து வந்தது. பேட்ட படத்தின் மூலம் அதுவும் தீர்ந்தது. அவருடன் நடிக்க வேண்டும் என்பதற்காகவே ‘பேட்ட’ படத்தில் நடிக்க சம்மதித்தேன். அதில், என் கதாபாத்திரம் சின்னதுதான் என்றாலும், மனதில் நிற்கிற மாதிரி ஒரு வேடம். மாஸ் கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தாலே, மாஸ் கதாநாயகி ஆகிவிடுகிறோம். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் இப்போதுதான் நடிக்க ஆரம்பித்து இருக்கிறேன். அது வெற்றி பெறும்போது, பார்க்கலாம். 96 படத்தின் வெற்றியை தொடர்ந்து எனக்கு நிறைய காதல் பட வாய்ப்புகள் வருகின்றன. தினம் இரண்டு மூன்று பேர்களிடம் கதை கேட்டு வருகிறேன். இதுவரை 50 பேர்களிடம் கதை கேட்டு விட்டேன். படம் பார்த்து விட்டு வீடு திரும்பிய பிறகும் கண்ணுக்குள் நிற்குமே அது மாதிரி கதைக்காக காத்திருக்கிறேன்.