மாஸ் ஹீரோவாகிறார் விஜய் ஆண்டனி !

விஜய் ஆண்டனியின் 'தமிழரசன்'. படத்தை இயக்கி இருக்கும் பாபு யோகேஸ்வரன், பத்திரிகையாளர். சின்னத்திரை வசனகர்த்தா. இதற்கு முன் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்த 'தாஸ்' படத்தை இயக்கியவர். பிறகு 2018-ல ஏன் மீண்டும் சினிமால முயற்சி செய்யக் கூடாதுன்னு தோணுச்சு. நான் ரெடி பண்ணி வச்சிருந்த கதைக்கு மெச்சூர்டான ஹீரோ தேவைப்பட்டது. அதனால, விஜய் ஆண்டனியை சந்தித்து கதை சொன்னேன். முதல் பாதிவரை கேட்டதுமே அவருக்குப் பிடிச்சிருந்தது. நல்லாருக்கு, கண்டிப்பா பண்ணலாம்னு சொல்லிட்டார். அப்படி ஆரம்பிச்சதுதான் தமிழரசன் என்கிறார் பாபு யோகேஸ்வரன். 'பிச்சைக்காரனு'க்கு அப்புறம் விஜய் ஆண்டனிக்கு இது மாஸ் ஹீரோ படமா இருக்கும். படத்துல 12 சின்ன சின்ன கேரக்டர்கள் இருக்கு. எல்லாமே முக்கியமான கேரக்டர்களா இருக்கும். வில்லன் அப்படின்னு இல்லை. சூழ்நிலைதான் எல்லாத்தையும் தீர்மானிக்குது. இந்தக் கதையிலயும் அப்படித்தான். படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்துவிட்டது. இன்னும் சில வேலைகள் உள்ளதால் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.