மிகவும் சிரமப்பட்டு நடித்த படம் சப்பக் – தீபிகா படுகோனே !

2005-ல் நடந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்குக்கு பிறகுதான் சுப்ரீம் கோர்ட்டு கடைகளில் திராவகம் விற்பதை தடை செய்தது. லட்சுமி அகர்வால் வாழ்க்கை ‘சப்பாக்’ என்ற பெயரில் திரைப்படமாகி உள்ளது. மேக்னா குல்சார் இயக்கி உள்ளார். இதில் லட்சுமி அகர்வால் வேடத்தில் தீபிகா படுகோனே நடித்துள்ளார். திராவகம் வீச்சில் முகமே மாறியதுபோன்ற தீபிகா படுகோனே தோற்றம் வெளியாகி படத்துக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. படம் பற்றி தீபிகா நம்மிடையே, சப்பாக் கதையும், கதாபாத்திரமும் என்னை உலுக்கியது. இதில் நடிக்க மிகவும் கஷ்டப்பட்டேன். மேக்கப் போட மூன்று மணிநேரம் ஆனது. அதை அகற்றுவதற்கு ஒரு மணிநேரம் பிடித்தது. இதனால் மிகவும் களைப்பாக இருந்தது. முந்தைய படங்கள் எதிலும் இவ்வளவு கஷ்டப்பட்டது இல்லை. படப்பிடிப்பு இறுதிநாளில் எனது ஒப்பனையை கலைத்து அவற்றை ஒரு இடத்தில் போட்டு எரித்தேன். அதன்பிறகுதான் அந்த கதாபாத்திரத்தில் இருந்து வெளியே வந்த உணர்வு ஏற்பட்டது இவ்வாறு தீபிகா படுகோனே கூறினார்.