Cine Bits
மிகவும் விரும்பப்படும் நடிகையாக ஐஸ்வர்யா ராஜேஷ் தேர்வு- நயன், சமந்தா அடுத்தடுத்த இடங்கள்!

பிரபல பத்திரிகை ஒன்று வெளியிட்ட ‘மோஸ்ட் டிஷ்ட்ரபிள் வுமன் 2018‘ பட்டியலில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதலிடத்தைப் பிடித்துள்ளார். ‘காக்கா முட்டை’ படத்தின் மூலம் புகழ்பெற்றவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். மேலும் இவர் நல்ல தரமான கதையையும், கேரக்டரையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘வடசென்னை’ , ‘கனா’ ஆகிய படங்களில் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றது. பிரபல பத்திரிகை ஒன்று சென்ற வருடத்தின் டாப் நடிகைகள் பற்றிய பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் “Most Desirable Woman 2018” என்கிற பட்டியலில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதலிடம் பிடித்துள்ளார். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது. நடிகை சமந்தா மூன்றாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.