மிருகா படத்தில் வில்லனாகும் நடிகர் ஸ்ரீகாந்த் !

மிருகா என்ற படத்தின் மூலம் 2வது முறையாக இணைந்துள்ளனர். இதில் ராய் லட்சுமி குழந்தையுடன் தனியாய் வசிக்கும் பெண்ணாகவும் அவருக்கு வில்லனாக ஸ்ரீகாந்தும் நடித்துள்ளனர். தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர் பி.வினோத் ஜெயின் தனது ஜாக்குவார் ஸ்டூடியோஸ் சார்பில் தயாரிக்கிறார். எம்.வீ.பன்னீர் செல்வம் கதை, திரைக்கதை எழுதி ஒளிப்பதிவு செய்ய பாலாவின் முன்னாள் உதவியாளர் ஜே.பார்த்திபன் இயக்குகிறார். வித்தியாசமான எண்ணம் கொண்ட ஒரு கொலைகாரனான ஸ்ரீகாந்த், தனது அழகு, பண்பு, படிப்பு ஆகியவற்றை முதலீடாக வைத்து, ஒரு ஒட்டுண்ணி போல பெண்களை ஏமாற்றி, வாழ்ந்து வருபவனாக நடிக்கிறார். ராய்லட்சுமியை காதலித்து திருமணமும் செய்து கொள்கிறார். அவரை ஏமாற்றிட நினைக்கும் போது, விதி வேறு விதமாக விளையாடுகிறது. இப்படி பூனையும் எலியும் கதை போல வேகமாக நகரும் கதையில் ஒரு கட்டத்தில் இவனது எல்லை மீறுகிறது. ஒரு பெண் தனக்கு சிக்கலான சூழல் ஏற்படுமானால், எதையும் எதிர்த்து நிற்பாள் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது ‘மிருகா’. அவரை ஏமாற்றிட நினைக்கும் போது, விதி வேறு விதமாக விளையாடுகிறது. இப்படி பூனையும் எலியும் கதை போல வேகமாக நகரும் கதையில் ஒரு கட்டத்தில் இவனது எல்லை மீறுகிறது. ஒரு பெண் தனக்கு சிக்கலான சூழல் ஏற்படுமானால், எதையும் எதிர்த்து நிற்பாள் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது ‘மிருகா’.  இப்படத்திற்கு இசை அமைத்திருக்கிறார்’ என்றார்.