மிஸ்டர் லோக்கல் படத்தை ரூ.1.17 கோடிக்கு விலை கொடுத்து வாங்கியது – ஏ.ஐ பிலிம்ஸ் !

சிவகார்த்திகேயன் உடன் நயன்தாரா மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்கும் படம் மிஸ்டர்.லோக்கல்.
ராஜேஷ் இயக்கி வருகிறார். படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் மிஸ்டர்.லோக்கல் படத்தின் கர்நாடக விநியோக உரிமையை ஏ.ஐ பிலிம்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. அதாவது ரூ.1.17 கோடிக்கு விலை கொடுத்து படத்தை வாங்கியுள்ளது. இது திரையுலகினர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக கர்நாடகாவில் வெளியான ‘சீமராஜா’ படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனால் மிஸ்டர்.லோக்கல் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.