மிஸ் இங்கிலாந்து படத்தை கைப்பற்றி அசத்திய இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்!

இந்தியாவில் பிறந்தவர் பாஷா முகர்ஜி. அவருக்கு 9 வயதாக இருக்கும்போதே, இங்கிலாந்துக்கு குடும்பத்தோடு இடம் பெயர்ந்துவிட்டார். இப்போது இங்கிலாந்தின் டெர்பி பகுதியில் வசித்து வரும், பாஷா முகர்ஜி. நாட்டிங்காம் பல்கலைக் கழகத்தில், மருத்துவ அறிவியல் பட்டம் படித்துள்ளார். இதுதவிர, மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சையில் ஒரு பட்டமும் பெற்றுள்ளார். இந்த நிலையில்தான், மிஸ் இங்கிலாந்து போட்டியில் பாஷா முகர்ஜி பங்கேற்றார். ஐந்து மொழிகளில் பேசும் திறன் பெற்றுள்ளார் பாஷா முகர்ஜி. எனவே போட்டியில் கலக்கிவிட்டார். பாஷா முகர்ஜிக்கு ஐக்யூ அளவு 146 என்ற அளவில் உள்ளது தெரியவந்தது. எனவே பொது அறிவு கேள்விகளுக்கு புகுந்து விளையாடி பதில் அளித்தார். பல சுற்று போட்டிகளுக்கு பிறகு, மிஸ் இங்கிலாந்து பட்டத்தையைும் வென்று அசத்தியுள்ளார். பட்டம்வென்ற சிறிது நேரத்தில் தனது பயனுள்ள நேரத்தை கொண்டாட்டத்தில் செலவிடாமல் மருத்துவ பணியில் செலவிட ஆரம்பித்துவிட்டார்.