மீண்டும் இணையப்போகும் தனுஷ் சிவகார்த்திகேயன் !

நடிகர் சிவகார்திகேயன் சின்ன திரையில் முதன்மையான வர்ணனையாளராக இருக்கும்போது இயக்குனர் பாண்டிராஜ் மூலம் சினிமாவில் அறிமுகமானார். பிறகு நடிகர் தனுஷ் அவரை தனது சொந்த தயாரிப்பில் எதிர் நீச்சல் படத்தின் மூலம் அவரை வெளியுலகத்திற்கு ஒரு சக்சஸ் ஹீரோவாக அவரை அறிமுகப்படுத்தினார். அவர் உச்சத்தில் இருக்கும்போதே சிவகார்த்திகேயனை கை தூக்கி விட்டார். இதுபோன்ற விஷயம் திரையுலகில் சாத்தியமில்லை. ஆனாலும் தனுஷ் நிகழ்த்தி காட்டினார். சிவகார்த்திகேயன் உச்சத்திற்கு சென்றுவிட்டார். அதற்கு பின்பு இருவரும் இணையவே இல்லை என்னகாரணமாகவோ இதுவரை இணைய வில்லை. இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தனுஷிடம், ‘‘சிவகார்த்திகேயனுடன் எப்போது மீண்டும் இணைவீர்கள்?’’ என கேட்கப்பட்டது. அதற்கு அவர் ‘‘எப்போது வேண்டுமானாலும் நடக்க வாய்ப்பு இருக்கு. என் தயாரிப்பில் அவர் நடிக்கலாம், அல்லது அவர் தயாரிப்பில் நான் நடிக்கலாம். அல்லது நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்கலாம்’’ என தனுஷ் பதில் அளித்துள்ளார்.