மீண்டும் இணையும் ஆர்யா-ஜீவா

அமரகாவியம், எமன் படங்களை இயக்கிய ஜீவா சங்கர் இயக்கும் புதிய படத்தில் ஜீவாவுடன் இணைந்து நடிக்கிறார் ஆர்யா. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், ராஜேஷ்.எம் இயக்கத்தில் ஜீவா நடித்த சிவா மனசுல சக்தி படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்தார் ஆர்யா. அதேபோல், மீண்டும் ராஜேஷ்.எம் இயக்கத்தில் ஆர்யா நாயகனாக நடித்த பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார் ஜீவா. அப்படி இதற்கு முன்பு நட்புக்காக மட்டுமே இணைந்து நடித்துள்ள ஆர்யா-ஜீவா ஆகிய இருவரும் ஜீவா சங்கர் இயக்கும் புதிய படத்தில் இரண்டு ஹீரோ கதையில் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.