மீண்டும் இணையும் சத்யராஜ்-வடிவேலு கூட்டணி

இங்கிலீஷ்காரன், லூட்டி என​ பல திரைப்படங்களில் சத்யராஜ்-வடிவேலு காமெடி கெமிஸ்ட்ரி நன்றாக வொர்க் அவுட் ஆகியது என்பது அனைவரும் அறிந்ததே.இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் இந்த கூட்டணி மீண்டும் இணையவுள்ளனர்.மலையாளத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'கட்டப்பானையில் ரித்விக் ரோஷன் ' என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் சத்யராஜ்-வடிவேலு ஆகியோர் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.இந்த படத்தை பிரபல மலையாள நடிகர் திலீப் தயாரிக்க, இந்த படத்தின் ஒரிஜினல் மலையாள படத்தை இயக்கிய நதிர்ஷா இயக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கும் என்று இயக்குனர் கூறியுள்ளார்.