மீண்டும் இணையும் சீனு ராமசாமி – விஜய் சேதுபதி

நான்காவது முறையாக சீனு ராமசாமியுடன் இணைய உள்ளார் விஜய் சேதுபதி. இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா தயாரிக்க உள்ள இந்தப் படத்திற்கு இசையமைக்க இளையராஜாவின் அனுமதிக்காகக் காத்திருக்கிறார்கள். கதை விவாதம் முடிந்துள்ள இப்படத்திற்கு 'மாமனிதன்' எனப் பெயரிட உள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ள நிலையில் மற்ற விவரங்களை விரைவில் எதிர்பார்க்கலாம்.