மீண்டும் இமயமலை பயணம் மேற்கொள்ளும் ரஜினி !

ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு போலீஸ் அதிகாரியாக நடிக்கும் ரஜினியின் புதிய கெட்டப் சமீபத்தில் வெளியாகி டிரெண்டில் இடம்பிடித்தது. இதற்கிடையில் தனது அடுத்த படத்திற்கான கதை கேட்பதிலும் ஆர்வம் காட்டி வருவதுடன் ஓரிரு இயக்குனர்களிடம் ஒன் லைன் கேட்டு அதை டெவலப் செய்யும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார். கே.எஸ்.ரவிகுமார், கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட மேலும் ஒன்றிரண்டு பேர் ரஜினியின் அடுத்த படம் இயக்கும் இயக்குனர்கள் பட்டியலில் இருக்கின்றனர். சூர்யாவின் காப்பான் நிகழ்ச்சியில் பேசிய ரஜினி, ‘தர்பார் படம் இது வரை என் படம் இல்லாத அளவுக்கு இப்படம் பெரிய படமாக இருக்க வேண்டும் என்பதற்காக டைரக்டர் முருகதாஸ் கடினமாக உழைத்து கொண்டு இருக்கிறார்’ என்றார். ஒவ்வொரு படம் முடிந்தவுடன் இமயமலை செல்லும் ரஜினிகாந்த் தர்பார் படப் பிடிப்பு முடிந்ததும் இமயமலை சென்று ஒரு வாரத்துக்கும் மேல் தியானத்தில் ஈடுபட முடிவு செய்திருக்கிறாராம். சீதோஷண நிலைக்கு ஏற்ப புறப்படும் தேதியை முடிவு செய்து செப்டம்பர் வாக்கில் இமயமலைக்கு செல்வார் என்று தெரிகிறது.