மீண்டும் ஒரு சுற்று வர தயாராகவிருக்கிறார் – ரித்திகா சிங்!

இறுதிச்சுற்று படத்தின் மூலம் ஒட்டு மொத்த தென்னிந்திய ரசிகர்களையும் கவர்ந்தவர் ரித்திகா சிங். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் இப்படம் செம்ம ஹிட் அடித்தது. இந்நிலையில் ரித்திகா சிங் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா ஆகிய படங்களில் நடித்துவிட்டு, பிறகு இவர் எங்கே போனார் என்று கேட்கும் நிலைமை வந்துவிட்டது. தற்போது இவர் அருண்விஜய் நடிக்கும் பாக்ஸர் படத்தில் முக்கியமான ரோலில் நடிக்கவுள்ளார், இவரும் ரியல் லைப் பாக்ஸர் என்பதால் கண்டிப்பாக இப்படத்தில் இவருக்கு முக்கிய பங்கு இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.