மீண்டும் ஒரு பேய் படத்தில் ஜீ.வி.பிரகாஷ் !

துள்ளாத மனமும் துள்ளும் டைரக்டு செய்த எழில், அடுத்து ஒரு பேய் படத்தை டைரக்டு செய்து வருகிறார். அதில் ஜீ.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஆந்திர அழகி ஈஷா ரெபா நடிக்கிறார். ரமேஷ் தயாரிக்கிறார். இசை சத்யா, செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். முருகன் எழுதிய கதைக்கு எழில் திரைக்கதை-வசனம் எழுதி டைரக்டு செய்து வருகிறார். படம், திருநெல்வேலியில் வளர்ந்து வருகிறது. முக்கிய காட்சிகளை பாங்காக்கில் படமாக்க திட்டமிட்டு இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.