மீண்டும் களத்தில் இறங்கிய நவ்யா நாயர் – வரவேற்கும் மாலிவுட் !

தமிழில், அழகிய தீயே, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, சேரனின் மாயக்கண்ணாடி, ராமன் தேடிய சீதை, சில நேரங்களில், ஆடும் கூத்து உட்பட பல படங்களில் நடித்தவர் நவ்யா நாயர். சிறந்த நடனக் கலைஞரான அவர், ஏராளமான மலையாள படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 2010 ம் ஆண்டு சந்தோஷ்மேனன் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு மும்பையில் செட்டில் ஆனார். இவர்களுக்கு சாய் கிருஷ்ணா என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் மீண்டும் நடிக்க வந்துள்ளார் நவ்யா நாயர். இதை வி.கே.பிரகாஷ் இயக்குகிறார். நவ்யாவின் கம்பேக் படம் பற்றி வேறு ஏதும் தெரிவிக்காத படக்குழு, இது உண்மைச் சம்பவ கதை என்று தெரிவித்துள்ளது. இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் மம்மூட்டியும் நடிகை மஞ்சுவாரியரும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர்.