மீண்டும் காதலில் விழுந்தாரா திரிஷா?

திரிஷா 2002-ல் இருந்து கதாநாயகியாக நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்துவிட்டார். தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் கவனம் செலுத்துகிறார். கர்ஜனை, சதுரங்க வேட்டை படங்களில் நடித்து முடித்துள்ளார். தற்போது பரமபதம், ராங்கி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் அவருக்கு திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் அவசரம் காட்டுகின்றனர். பட அதிபர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் முடிந்து திருமணம் வரை சென்று ரத்தாகிவிட்டது. தற்போது தனது வலைத்தள பக்கத்தில் ரசிகர்களுடன் திரிஷா கலந்துரையாடி வருகிறார். அப்போது ஒரு ரசிகர் நீங்கள் காதலிக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த திரிஷா, நான் தனியாகத்தான் இருக்கிறேன், ஆனாலும் வருங்கால கணவர் முடிவாகிவிட்டது என்றார். இதன்மூலம் அவர் காதலில் விழுந்து இருப்பது உறுதியாகி உள்ளது. யாரை காதலிக்கிறார் என்ற விவரத்தை தெரிவிக்கவில்லை.