மீண்டும் சர்ச்சையில் கங்கனா படம் !

கங்கனா ரணாவத் ஏக்தா கபூர் தயாரிப்பில்,‘மெண்டல் ஹாய் க்யா’ படத்தில் நடித்துள்ளார். தற்சமயம் இப்படத்திற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த மாதம் இறுதியில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். படத்தை சமீபத்தில் தணிக்கை குழுவுக்கு அனுப்பினர். படத்தை பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள் ‘யூ ஏ’ சான்றிதழ் அளித்தனர். இந்த நிலையில் படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என்று கூறி இந்தியன் சைக்காட்ரிக் சொசைட்டியின் நிர்வாகிகள் தணிக்கை குழுவுக்கு கடிதம் அனுப்பி உள்ளனர். இந்த படம் மன நல பராமரிப்பு சட்ட பிரிவுகளை மீறி இருப்பதாகவும் குற்றம் சாட்டினர். இதனால் படத்துக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது. படத்தின் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் கூறும்போது, “படத்தில் மனநலம் பாதித்தவர்களை தவறாக சித்தரிக்கவில்லை. யார் உணர்வுகளையும் புண்படுத்தவும் இல்லை. மனநல பாதிப்பு விஷயத்தை நேர்மையாகவே சொல்லி இருக்கிறோம்” என்றார். எதிர்ப்பு காரணமாக படத்தின் தலைப்பை மாற்றுவது குறித்து படக்குழுவினர் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.