மீண்டும் சிம்புவோடு இணைந்த பாரதிராஜா !

சிம்பு அடுத்ததாக நடிக்க இருக்கும் மாநாடு படத்தில் இயக்குனர் பாரதிராஜா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். நடிகர் சிம்பு 'வந்தா ராஜாவாகத்தான் வருவேன்' படத்திற்கு பிறகு மாநாடு என்ற புதிய படத்தில் நடிக்க உள்ளார். வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தை, வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். எடிட்டராக பிரவீன் கே.எல். ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஹீரோயினாக நடிக்க கல்யாணி பிரியதர்ஷன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அரசியல் படமான இதில் வில்லன் கதாபாத்திரத்தில் வெங்கட் பிரபுவின் தந்தையான கங்கை அமரன் நடிக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால் இதை வெங்கட் பிரபு மறுத்தார். இந்நிலையில் இப்போது அந்த கதாபாத்திரத்தில் பாரதிராஜா நடிக்க இருப்பதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உறுதியளித்துள்ளார். ஆனால் அவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை என்றும் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.