மீண்டும் சீரியல் பக்கம் வந்த சமுத்திரக்கனி !

சன் டி.வியில் புதிய சீரியல் ஒன்றைத் தயாரித்து நடிக்கிறார், ராதிகா சரத்குமார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் `இயக்குநர் சமுத்திரக்கனி எனக்குச் சொல்லிக்கொடுக்கிறார். இருவரும் நீண்ட நாள்களுக்குப் பிறகு சின்னத்திரையில்…' என்று சமுத்திரக்கனியுடன் தான் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார் ராதிகா. அதைப் பார்த்த ரசிகர்கள், 'சமுத்திரக்கனி மீண்டும் சின்னத்திரைக்கு வந்துவிட்டாரா?' எனக் கேள்வி எழுப்பினர். இதையடுத்து சமுத்திரக்கனியிடம் பேசினோம். ராடான் நிறுவனம் நான் வளர்ந்த இடம். ஏற்கெனவே, அவர்கள் தயாரித்த `அரசி' சீரியலை இயக்கினேன். இப்போ அவங்க நடிக்கிற புது சீரியலுக்கான டிரெய்லரை பண்ணிக் கொடுங்கன்னு ராதிகா மேடம் கேட்டாங்க. அதனாலதான் அந்த டிரெய்லர்ல வொர்க் பண்ணினேன். ஆனால், அதன் இயக்குநர் நான் இல்லை. அதேசமயம், ராடான் நிறுவனம் என்ன கேட்டாலும் செய்து கொடுக்க நான் தயார்” என்றார் உறுதியான குரலில்.