மீண்டும் ஜப்பானில் ரிலீஸ் ஆகும் பிரபாஸ் படம் !

பாகுபலி மற்றும் பாகுபலி-2 படங்களில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமானவர் பிரபாஸ். இவர் நடித்த படங்கள் தற்போது தெலுங்கில் மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் வெளியாகின்றன. பெரிய பட்ஜெட்டில் அதிரடி படமாக இது தயாராகிறது. இதில் ஜோடியாக இந்தி நடிகை ஸ்ரத்தா கபூர் நடிக்கிறார். அருண் விஜய், நீல் நிதின் முகேஷ் ஆகியோர் வில்லன்களாக நடிக்கின்றனர். மந்திரா பேடி, ஜாக்கி ஷெராப்பும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். சுஜித் இயக்குகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் தயாராகிறது. இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத அளவுக்கு சண்டை காட்சிகளை பிரத்யேகமாக உருவாக்கி உள்ளனர். சண்டை காட்சிகள் அபுதாபியில் 60 நாட்கள் படமாக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் சாஹோ படம் ஜப்பான் மொழியில் டப்பிங் செய்யப்பட்டு அந்த நாட்டிலும் வெளியிடப்படுகிறது. பாகுபலி படமும் ஜப்பானில் ரிலீசானது குறிப்பிடத்தக்கது.