மீண்டும் ஜோதிகா சூர்யா கூட்டணி- ஆனால் ஜோடியாக அல்ல!

திருமணத்திற்குப் பிறகு மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ள ஜோதிகாவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'காற்றின் மொழி'. ராதா மோகன் இயக்கத்தில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், கல்யாண் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கிறார் ஜோதிகா. கல்யாண், பிரபுதேவாவை வைத்து குலேபகாவலி படத்தை இயக்கியவர். இப்படத்தை சூர்யாவின் 2டி தயாரிக்கிறது, படத்தில் ஜோதிகாவுடன் ரேவதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், யோகிபாபு, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இப்படம் காமெடி கதைக்களத்தில் உருவாவதாகக் கூறப்படுகிறது.