மீண்டும் டைட்டானிக் பெயர் கொண்டு தமிழில் படம் தயாரித்து வருகின்றனர்

ஹாலிவுட்டில்  ஜேம்ஸ்  கேமரூன்  இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம்  டைட்டானிக். அதே பெயரில் மாயவன் படத்தை இயக்கி​, தயாரித்த சி.வி.குமார் 'டைட்டானிக்' – காதலும் கவுந்து போகும் என்று  பெயர் வைத்து தமிழில் தயாரித்து வருகிறார். இதில் நாயகனாக கலையரன்  நடிக்கிறார். இந்த நாயகனை வைத்து அதே கண்கள் என்ற படம் தயாரித்தார், ஆனால்  அந்த படம் பெரிய வரவேற்பு தரவில்லை , இருந்தாலும் மீண்டும் அவரை வைத்து இந்த படத்தை தயாரித்துள்ளார். நாயகியாக கயல் ஆனந்தியும், அஸ்னா சவேரியும் நடிக்கிறார்கள். எம் .ஜானகி  ராமன் எழுதி இயக்கும்  இந்த படத்தில் பல்லு ஒளிப்பதிவாளராகவும், நிவாஸ் கே.பிரசன்னா இசையமைப்பாளராகவும் இருக்கின்றனர். எஸ்.ராம்  பிரசாத் கலை  இயக்கத்தை கவனிக்கிறார்.  ஜனவரி  1 தேதி இந்த படத்தின் பர்ஸ்ட்  லுக்கை  வெளியிட உள்ளனர்.