மீண்டும் தனுஷுடன் நடிக்கும் சினேகா!

புதுப்பேட்டை' படத்தைத் தொடர்ந்து, மீண்டும் தனுஷுக்கு நாயகியாக சிநேகா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 'கொடி' படத்தைத் தொடர்ந்து மீண்டும் துரை.செந்தில்குமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ். அப்படத்தைப் போலவே இப்படத்தின் கதையை இரட்டை நாயகர்கள் கதையாகவே உருவாக்கியுள்ளார். ஆனால், முந்தைய படம் போன்று அண்ணன் – தம்பியாக அல்லாமல் தந்தை – மகன் கதையாக உருவாக்கியுள்ளார். இதில் அப்பா தனுஷுக்குத் தான் நாயகியாக நடிக்கவுள்ளார் சிநேகா. இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ளது. விவேக்-மெர்வின் இசையமைப்பாளர்களாக பணிபுரியவுள்ளார். இன்னொரு தனுஷுக்கு நாயகியாக நடிக்க முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.