மீண்டும் தமிழில் கால்பதிக்கும் கீர்த்தி சுரேஷ் !

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் மற்றும் தெலுங்கில் டாப் ஹீரோக்கள் பலருடன் நடித்துவிட்டார். தற்போது ஹிந்தியில் அறிமுகம் ஆகிறார் அவர். அதற்காக அவர் கடும் உடற்பயிற்சி செய்து தன்னுடைய எடையை அதிகம் குறைத்து ஒல்லியான தோற்றத்திற்கு மாறியதை பார்த்தோம். இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு தமிழ் படத்தில் கமிட் ஆகியுள்ளார் கீர்த்தி சுரேஷ். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க உள்ள ஒரு படத்தில் தான் கீர்த்தி ஹீரோயினாக நடிக்கிறார். ஹீரோ யாரென்று முடிவாகவில்லை. தொழிற்நுட்பக்கலைஞர்கள் பற்றிய அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.