மீண்டும் தரணீதரனுடன் இணையும் சிபிராஜ் !

நடிகர் சிபிராஜும், டைரக்டர் தரணிதரனும், ‘ஜாக்சன் துரை’ படத்தில் முதன்முதலாக இணைந்து பணிபுரிந்தார்கள். அந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து இருவரும் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளனர். படத்துக்கு, ‘சிவா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. காவ்யா மகேஷ் படத்தைத் தயாரிக்கிறார். இதில், சிபிராஜ் காட்டிலாகா அதிகாரியாக நடிக்கிறார். புலி ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறது என்றார். அனைத்து வயதினரும் தொடர்புபடுத்திக் கொள்ளும் வகையில், கதை அமைந்து இருக்கிறது. பொழுதுபோக்கு அம்சங்களை கொண்ட தற்போதையை சூழ்நிலைக்கு ஏற்ப படம் இருக்குமென படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.