மீண்டும் தல படம் மூலம் நடிக்கவருகிறார் நஸ்ரியா !

அஜித்தின் 60 வது படமான வலிமை படத்தின் துவக்கவிழா சமீபத்தில் நடைபெற்றது. நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய ஹெச்.வினோத் தான் இந்த படத்தையும் இயக்குகிறார். இந்த படத்தில் நயன்தாரா ஐந்தாவது முறையாக அஜித்துக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்நிலையில் நஸிரியாவும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்ற முக்கிய தகவல் கசிந்துள்ளது. தனுஷின் நையாண்டி படத்துடன் சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துகொண்டு குடும்பவாழ்க்கையில் மூழ்கிபோனார். சில வருட இடைவெளிக்கு பிறகு கடந்த வருடம் கூடே என்ற மலையாள படத்தில் ப்ரிதிவிராஜுக்கு தங்கையாக நடித்தார்.அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்திற்கே நஸ்ரியாவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக வைக்க முயற்சிசெய்தனர். அப்பொழுது நடிக்க முடியாமல் போனது குக்குறிப்பிடத்தக்கது.