மீண்டும் தாய்லாந்து இளவரசி ரஜினியை சந்தித்தார்

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த கபாலி படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டில் நடந்தது. அதற்கு உதவி செய்தவர் தாய்லாந்து இளவரசியான ராஜ்தாஸ்ரீ ஜெயம்குரா. கபாலி படத்திற்கு பிறகு தாய்லாந்தில் ரஜினிக்கு ரசிகர்கள் அதிகரித்துள்ளனர்.இந்த நிலையில் இந்தியா வந்த தாய்லாந்து இளவரசி ராஜ்தாஸ்ரீ ஜெயம்குரா, சூப்பர் ஸ்டார் ரஜினியை நேரில் சந்திக்க விரும்பியுள்ளார். இதற்கு கலைப்புலி எஸ்.தாணுவின் மகன் பரந்தாமனை தொடர்பு கொண்டு. அவரது ஏற்பாட்டில் தாய்லாந்து இளவரசி நேற்று முன் தினம் ரஜினியை அவரது வீட்டில் சந்தித்து பேசியுள்ளார்.
அப்போது கபாலி படத்தின் வெற்றி பற்றியும், தற்போது தயாராகி வரும் 2.ஓ படம் பற்றியும் கேட்டு அறிந்துள்ளார். மீண்டும் ரஞ்சித்துடன் இணைந்து பணியாற்றுவதற்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். பின்னர் தாய்லாந்து நாட்டுக்கு அரசு விருந்தினராக வரவேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார். இவர்களது சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் நடைபெற்றுள்ளது.