மீண்டும் திரையில் தனுஷ், செல்வராகவன், யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி !

நடிகர் தனுஷ், அடுத்த மாதம் வெளியாகும் ‘அசுரன்’ பட வெளியீட்டில் தற்போது பிஸியாக உள்ளார். அதோடு இயக்குநர் துரை செந்தில் குமாரின் ‘பட்டாஸ்’ திரைப்படத்தில் கமிட்டாகியுள்ளார். தவிர, இயக்குநர் கார்த்திக் சுப்பராஜுடன் பெயரிடப்படாத ஒரு படத்திலும் அவர் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் தனுஷ், தனது சகோதரர் செல்வராகவனுடன் மீண்டும் ஒரு படத்தில் இணைந்துள்ளார். ’காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மற்றும் மயக்கம் என்ன ஆகியப் படங்களுக்குப் பிறகு நான்காவது முறையாக இவர்கள் இணைகிறார்கள். இப்படத்திற்கு இசை யுவன் சங்கர் ராஜா. அதோடு இந்தப் படம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்படியெனில் தனுஷ் – செல்வா – யுவன் ஆகிய மூவரின் ரசிகர்களுக்கும் இந்த விஷயம் நிச்சயம் மகிழ்ச்சியைத் தரும். கலைப்புலி எஸ்.தாணுவின் ’வி கிரியேஷன்ஸ்’ இப்படத்தைத் தயாரிப்பதாகக் கூறப்படுகிறது.