மீண்டும் துணை இயக்குனருடன் அட்லீ மோதல் !

இயக்குனர் அட்லி ராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய திரைப்படங்களுக்கு பிறகு தற்போது விஜயின் தளபதி 63 படத்தை இயக்கி வருகிறார். அட்லி இயக்கும் அனைத்து படமும் காப்பி படம் என ஒரு விமர்சனம் எழுந்து கொண்டே இருந்தது இவர் கடைசியாக இயக்கிய மெர்சல் திரைப்படமும் ரஜினியின் மூன்று முகம் திரைப்படத்தின் ரீமேக் போல் இருந்தது அதனால் பல பிரச்சனைகளை சந்தித்தார் அட்லி. துணை இயக்குனர் செல்வா தளபதி 63 திரைப்படத்தின் கதை என்னுடையது என புகார் கொடுத்தார். அதனால் அட்லி துணை இயக்குனரிடம் பிரச்சனை பெரிதாகி விட்டது எனக் கூறி சமாதானப் படுத்தினார். ஆனால் துணைஇயக்குனர் சமாதானமாகாமல் அட்லி  காப்பியடித்து எடுக்கிறார் படங்களில் அனைத்திலும் இவர் பெயர் இடம் பெற வேண்டும் என்று நினைக்கிறார் இது எந்த வகையில் நியாயம் என கேட்டுள்ளார்.