மீண்டும் தெலுங்கில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கும் கீர்த்தி சுரேஷ் !

தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்ற மகா நாடி படத்திற்கு பிறகு தமிழில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார் கீர்த்தி சுரேஷ். பாலிவுட்டிலும் தடம் பதித்துள்ளார். இந்நிலையில் மீண்டும் தெலுங்கில் கால்பதித்துள்ளார். நிதின் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் பூஜை அண்மையில் நடந்தது. இந்நிகழ்ச்சி பிரபல இயக்குனர் திரி விக்ரம் ஸ்ரீனிவாஸ் தலைமையில் நடந்தது இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். வெங்கி அட்லூரி இயக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவு பி. சி. ஸ்ரீராம் .