Cine Bits
மீண்டும் த்ரில்லர் கதையில் நயன்தாரா
அவள்’ படத்தின் இயக்குநர் மிலிந்த் ராவ் நயன்தாரா படத்தை இயக்க இருக்கிறார். இப்படத்தில் நயன்தாராவுடன் ஒரு நாய்க்கும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் உள்ள வகையில் திரைக்கதை அமைத்துள்ளதாக இயக்குனர் மிலிந்த் ராவ் தெரிவித்துள்ளார். மிலிந்த் ராவ் 7 ஆண்டுகளாக இயக்குநர் மணிரத்தினத்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். அதன் பிறகு ‘காதல் டூ கல்யாணம்’ என்ற படத்தை இயக்கினார். 2010-ல் எடுத்து முடிக்கப்பட்ட இத்திரைப்படம் இன்று வரை வெளியாகாமல் உள்ளது. அதன் பிறகு சித்தார்த், ஆண்ட்ரியா நடிப்பில் வெளியாகிய ‘அவள்’ என்னும் திகில் திரைப்படத்தை இயக்கினார் மிலிந்த் ராவ். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.