மீண்டும் நடிக்கவரும் தலைவாசல் விசித்திரா !

1990-களில் முன்னணி நடிகையாக இருந்த விசித்திரா மீண்டும் நடிக்க வருகிறார். இவர் தலைவாசல் படத்தில் நடித்து பிரபலமானார். தொடர்ந்து தேவர் மகன், அமராவதி, ரசிகன், முத்து உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மீண்டும் நடிப்பது குறித்து விசித்திரா கூறும்போது, நான் 90 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன். 18 வருடங்களுக்கு முன்னால் நடிப்பதை நிறுத்திவிட்டேன். இப்போது நல்ல கதையம்சம் உள்ள படங்கள் வருகின்றன. வலுவான குணசித்திர வேடங்களில் நடிக்க முடிவு செய்துள்ளேன். இதற்காக கதைகள் கேட்டு வருகிறேன் என்றார்.