மீண்டும் நடிப்பில் களமிறங்கும் விஜய், அஜித் பட கதாநாயகி!

‘தேவா’வில் விஜய்யுடனும், ‘வான்மதி’யில் அஜித்துடன் ஜோடியாக நடித்தவர் நடிகை ஸ்வாதி. இரண்டு படங்களும் வெற்றியடைந்ததை தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன. ஆனால், அதையெல்லாம் நிராகரித்து விட்டு படிப்புதான் முக்கியம் என்று ஐதராபாத்திற்கு சென்றுவிட்டார் ஸ்வாதி. நான் நடித்து இத்தனை ஆண்டுகள் ஆனாலும் தமிழ் ரசிகர்கள் மீண்டும் எப்பொழுது நடிக்கவருவீர்கள் என்று ஆவலுடன் கேட்கிறார்கள். வெளியில் எங்கு சென்றாலும் அடையாளம் கண்டுகொள்கிறார்கள். இத்தனை வருடம் கழித்தும் இன்னும் இளமையாகவே இருக்கிறீர்கள் என்று பாராட்டுகிறார்கள். எனவே நான் மீண்டும் நடிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். என் குடும்பத்தாரும் எனக்கு முழு ஆதரவோடு இருக்கிறார்கள். நல்ல வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறேன். இவ்வாறு ஸ்வாதி கூறினார். தற்போது, தெலுங்கில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்கி வருகிறார்.