மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் ஸ்ருதி ஹாசன்

லண்டன் காதலன் மைக்கேல் கோர்சேலை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிடுவார் என்று கூட பரபரப்பு எழுந்தது. ஆனால் அந்த செய்தியை மறுத்துள்ளார். திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று எப்போது நினைக்கிறேனோ அப்போது திருமணம் செய்துகொள்வேன் என திருமணம் பற்றிய முடிவை தெரிவித்திருக்கிறார். ஸ்ருதி ஹாசன் கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிப்பில் நுழைய முடிவு செய்திருக்கிறார். ஸ்ருதிக்கு மீண்டும் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்த வண்ணமிருப்பதால் புதுப்படங்களை ஒப்புக்கொள்ள விருக்கிறார். விரைவில் தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க உள்ளதாக ஸ்ருதி கூறுகிறார்.