மீண்டும் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் மிஸ்டர். லோக்கல் படம் வருகிற மே 1-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. அடுத்ததாக ரவிக்குமார் இயக்கத்தில் அறிவியல் சார்ந்த படத்தில் நடித்து வந்த சிவகார்த்திகேயன், தற்போது பி.எஸ்.மித்ரன் இயக்கும் புதிய படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில், பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் இறுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ், சிவகார்த்திகேயனின் முதல் தயாரிப்பான ‘கனா’ படத்தில் நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.