மீண்டும் பாலா – கைகொடுக்கும் சூர்யா

இயக்குனர் பாலா இயக்கத்தில் கடைசியாக நாச்சியார் படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து விக்ரம் மகன் துருவ் விக்கிரமை வைத்து வர்மா படத்தை இயக்கி இருந்தார். இப்படம் முழுமை பெற்ற பிறகு படம் தயாரிப்பு தரப்பிற்கு பிடிக்காத காரணத்தால் படத்தை வெளியிடாமல், படத்தின் பெயரை ஆதித்யா வர்மா என மாற்றி முற்றிலும் புதிய குழுவை வைத்து படமெடுத்து விட்டார்கள். இதனால் தனது அடுத்தப்பட வேளைகளில் தீவிரமாக இறங்கினார் இயக்குனர் பாலா. ராமநாதபுரத்தை சுற்றி அங்கு சில மாதங்கள் இருந்தது கதை எழுதி, அந்த கதையை நடிகர் சூர்யாவிடம் சொல்லி ஓகே வாங்கிவிட்டாராம். சூர்யா தற்போது சூரரை போற்று படத்தில் நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் செப்டம்பர் வரை இருக்கிறது. அதனை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளாராம். அந்த படத்தின் இடையில் பாலா படத்திற்கு கால்ஷீட் தருவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிப்பார்க்கபடுகிறது.