மீண்டும் புதுப்பொலிவுடன் அட்டகத்தி நந்திதா !

தமிழில் அசுரவாதம் படத்திற்கு பிறகு படவாய்ப்புகள் ஏதுமில்லாமல் இருந்த நந்திதா தெலுங்கு படங்களில் நடித்துவருகிறார். தனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரங்களைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப பன்முகத் திறமையை வெளிப்படுத்தி, அனைவரிடமும் பாராட்டுக்களை குவிப்பதில் வல்லவர்.  இந்நிலையில் மீண்டும் புதுப்பொலிவுடன் தமிழில் சிபிராஜுடன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்தை நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன் மற்றும் டிக் டிக் போன்ற படங்களை இயக்கிய சௌந்தராஜன் இயக்குகிறார். மேலும் இப்படத்தில் மகன் சிபிராஜுடன் அவரது தந்தை சத்யராஜ் உடன் நடிக்கிறார். திகில் கதையில் உருவாகும் இப்படத்தில் நந்திதா நிருபர் வேடத்தில் நடிக்கிறார்.