மீண்டும் போலீஸ் அதிகாரியாக களமிறங்கும் அஜித் !

அஜித், தற்போது போனிகபூர் தயாரிக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கோட்டு சூட்டு அணிந்து தனது தோற்றத்தை டிப் டாப்பாக காட்டியிருக்கிறார். இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிக்க இருக்கும் புதிய படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க தன்னை தயார்படுத்தி வருகிறார் அஜித். இப்படத்திற்காக உடல் எடையை குறைக்க இயக்குனர் கேட்டுக் கொண்டதை அடுத்து ஜிம்மிலேயே கிடந்து தனது உடல் எடையை நிறையவே குறைத்திருக்கிறார். 90களில் பார்த்தது போல் தற்போது கனக்கச்சிதமாக உடல் தோற்றத்தை வடிவமைத்திருக்கும் அஜித் அந்த தோற்றத்துடன் வெளியிடங்களில் நடமாடத் தொடங்கியிருக்கிறார்.