மீண்டும் மாதவன் ஜோடியாக சிம்ரன்!

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாறு, ராக்கெட்ரி : தி நம்பி எபெக்ட் என்ற பெயரில் படமாக்கப்படுகிறது. நம்பி நாராயணன் கேரக்டரில் மாதவன் நடிக்கிறார். தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இதில், மாதவன் ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார். மும்பையில்  படப்பிடிப்பு நடக்கிறது. பார்த்தாலே பரவசம், கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய படங்களுக்கு பிறகு மீண்டும் மாதவன், சிம்ரன் ஜோடி சேர்ந்துள்ளனர்.