மீண்டும் ‘மீ டூ’ சர்ச்சை: பட அதிபர் ராஜனுடன் சின்மயி மோதல் !

நடிகைகள், பெண் இயக்குனர்கள், பாடகிகளின் பாலியல் புகார்களால் பட உலகை உலுக்கி வந்த மீ டூ இயக்கம் சமீபகாலமாக ஒய்ந்து இருந்தது. இந்த நிலையில் சென்னையில் நடந்த ‘பற’ என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் சினிமா தயாரிப்பாளரும் நடிகருமான கே.ராஜன் பேசும்போது, பாலியல் புகார் சொல்லி பரபரப்பை ஏற்படுத்திய பாடகி சின்மயிக்கு கண்டனம் தெரிவித்தார். அவர் பேசும்போது, சமீபகாலமாக சமூகத்தில் பிரபலமாக இருப்பவர்களின் பெயரை கெடுக்கும் செயல் நடக்கிறது. 15 வருடங்களுக்கு முன்பு நடந்ததை இப்போது சொல்வதன் நோக்கம் என்ன? விளம்பரத்துக்காக பெருமைக்குரியவர்களை அசிங்கப்படுத்தி பெயரை சிதைக்கலாமா?. அப்படி சிதைத்தால் உங்களையும் சிதைப்பார்கள்.” என்று பேசினார். கே.ராஜன் பேசிய வீடியோவை பாடகி சின்மயி தனது டுவிட்டரில் பகிர்ந்து, “சிதைக்க ஆட்கள் வைத்து இருக்கிறாராமே. பயப்பட வேண்டுமா? என கேள்வி எழுப்பி உள்ளார்.