மீண்டும் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் சூப்பர்ஸ்டார் !

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். மேலும் ஓரிரு படங்களில் நடித்த பிறகே அரசியல் கட்சி தொடங்குவார் என்ற யூகங்கள் நிலவுகின்றன. தர்பார் படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக வருகிறார். அதிரடி சண்டை படமாக தயாராகிறது. இந்த படத்துக்கு பிறகு சிவா இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்க சிவா தற்போது ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இதனால் ரஜினி படத்தை அவரால் இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்திலேயே ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முருகதாஸ் சொன்ன கதை பிடித்துபோய் ரஜினிகாந்த் சம்மதம் சொல்லி விட்டதாக கூறப்படுகிறது.