மீண்டும் மோத தயாராகும் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் படங்கள் !

இரண்டு பிரபல நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாகும் போது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். 2016-ம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடித்த ’ரெமோ’ மற்றும் விஜய் சேதுபதி நடித்த றெக்க’ ஆகிய படங்கள் ஒரே தேதியில் வெளியானது. இதில் றெக்க’ திரைப்படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை. தற்போது அடுத்த மாதம் 16-ந் தேதி அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள சிந்துபாத்’ வெளியாக உள்ளது. அதே நாளில் ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மிஸ்டர் லோக்கல்’ படமும் வெளியாக உள்ளது. இரண்டுமே பெரும் எதிர்பார்ப்புக்குரிய படங்களாக இருப்பதால், எந்தப் படம் வரவேற்பை பெறும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் நம்பிக்கையில் உள்ளனர்.