மீண்டும் ரவுடி கூட்டணியுடன் கைகோர்க்கும் சமந்தா !

நயன்தாராவின் காதலன் விக்னேஷ் சிவன்.  விஜய் சேதுபதி நயன் ஜோடிசேர்ந்து பெரும் வெற்றி பெற்ற படம் ‘நானும் ரவுடி தான்’ இந்த படத்தில் நடிக்கும் போதுதான் நயன்தாராவிற்கும் விக்னேஷ் சிவனுக்கும் காதல் பற்றி கொண்டது. இப்பொழுது அதே கூட்டணி மீண்டும் இணைகிறது. இதுவும் நானும் ரவுடி தான் படம் போன்று ரொமான்டிக் காமெடி படம் தான். விஜய்சேதுபதியிடம் ஒப்புதல் வாங்கிக்கொண்டார்.இரண்டு வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்ட இரண்டு பெண்களை விஜய்சேதுபதி காதலிப்பது போன்று கதை. இதில் ஒரு காதலியாக நயன்தாராவும், மற்றொரு காதலியாக சமந்தாவும் நடிக்கவுள்ளனர். படத்திற்கு காற்று வாக்கில் இரண்டு காதல் என தலைப்பு வைக்கப்படலாம் என விக்னேஷ்   தரப்பில் கூறப்படுகிறது.