மீண்டும் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க மாட்டேன் – கீர்த்தி சுரேஷ் !

சாவித்திரி வாழ்க்கை படத்தில் நடித்ததற்காக தேசிய விருது கிடைத்துள்ளது. இந்நிகழ்வு பற்றி அவர் அளித்த பேட்டியின் விவரம் வருமாறு, சாவித்திரி வாழ்க்கை படத்தில் நடித்ததற்காக தேசிய விருது கிடைத்து இருப்பது மகிழ்ச்சி. மீண்டும் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க மாட்டேன். சாவித்திரி படம்தான் நான் நடித்த முதலும் கடைசியுமான வாழ்க்கை வரலாறு படமாக இருக்கும். சாவித்திரி என்ற மகா நடிகை வேடத்தில் நடித்த பிறகு இன்னொரு வாழ்க்கை படத்தில் நடிப்பது சிறப்பாக இருக்காது. சாவித்திரி வாழ்க்கை படப்பிடிப்பு முடிந்ததும் எதையோ விட்டு போனமாதிரி மனம் உடைந்து அழுது விட்டேன். இந்த சினிமா படப்பிடிப்பில் மனதோடு எல்லோரும் இணைந்து இருந்தோம் இவ்வாறு கீர்த்தி சுரேஷ் கூறினார்.