மீண்டும் விஜயுடன் கைகோர்க்கும் சத்யராஜ் !

அட்லி இயக்கத்தில் 3வது முறையாக விஜய் நடிக்கும் படத்துக்கு பிகில் என்று பெயரிடப்பட்டுள்ளது. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. அப்பா, மகன் என இரண்டு தோற்றங்களில் நடித்துள்ள விஜய்யின் இரு வேறு தோற்றங்களும் போஸ்டரில் இடம் பெற்றுள்ளது. நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை. ஜி.கே. விஷ்னு ஒளிப்பதிவு, ரூபன் படத்தொகுப்பு மற்றும் டி. முத்துராஜ் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளனர். இப்படத்தில் இடம்பெறும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் விஜய்க்கு தந்தையாக வருகிறார் என்கிறார்கள். விஜய்யுடன் சத்யராஜ் நண்பன், தலைவா, மெர்சல் படங்களுக்கு பின்னர் மீண்டும் விஜயுடன் இணையும் படம்.