மீண்டும் வெள்ளித்திரையில் லைலா!

லைலா மீண்டும் சினிமாவில் நடிக்க வருகிறார். இவருக்கு மெக்தின் என்ற தொழில் அதிபருடன் 2006-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்காமல் லைலா ஒதுங்கி இருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். கண்டநாள் முதல் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முயற்சி நடப்பதாக அதில் கதாநாயகனாக நடித்திருந்த பிரசன்னா தெரிவித்து இருந்தார். எனவே அந்த படத்தில் லைலா நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அந்த படத்துக்கு முன்னதாகவே ‘ஆலீஸ்’ என்ற திகில் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரிக்கிறார்.