மீண்டும் வெள்ளி திரையில் கால்பதிக்கிறார் சாந்தினி !

சினிமாவில் நடிகர் சாந்தனுவுடன் அறிமுகமானவர் சாந்தினி, நல்ல அழகும் திறமை இருந்தும் அவரால் வெள்ளித்திரையில் சரியாக கால்பதிக்கமுடியவில்லை. இதனால் சின்ன திரைப்பக்கம் ஒதுங்கினார். பின்பு நடன இயக்குனர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். தற்பொழுது மீண்டும் வெள்ளித்திரையில் கால்பதிக்கும் வாய்ப்பு கதவை தட்டியுள்ளது. சினிமா பிளாட்பார்ம் ரித்தீஷ் தயாரிப்பில் எல்.ஜீ.ரவிச்சந்தர் இயக்கத்தில் சந்தோஷ் பிரதாப் – சாந்தினி ஜோடியாக நடிக்கும் படம் 'நான் அவளை சந்தித்தபொழுது'. படம்குறித்து சாந்தினி நம்மிடையே கூறுகையில் வெளியூரில் வழி தெரியாமல் தவித்த கிராமத்து பொண்ணை இளைஞன் ஒருவன் அவளது கிராமத்திற்கு கொண்டுபோய் விடுகிறான். ஊர்க்காரர்கள் இருவரையும் காதலர்கள் என்றே நினைக்கின்றனர். பின்பு என்ன நடிக்கிறது என்பது தான் கதை. இம்மாதம் 27-ம் தேதி படம் வெளிவரவிருக்கிறது.